தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ சாரஸ் மற்றும் 5 கிலோ கேட்டமைன் போதைப் பொருட்களை கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த முறப்பநாட்டை சேர்ந்த துரைப்பாண்டி கைது செய்யப்பட்டார்.