சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஜலகண்டபுரத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதற்காக ஓட்டல் ஊழியர்கள் மீது போதை இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியானது. ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள அந்த ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட போதை இளைஞர் பணம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட கடை ஊழியர்கள் அந்த போதை ஆசாமியிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் இளைஞர் பட்டாளத்துடன் திரும்பி வந்த நபர், ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது.