சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியில் காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. போதைப் பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்ற தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், போதைக்கு எதிரான பல்வேறு வகையான பதாகைகள் ஏந்தி, முக்கிய வீதி வழியாக போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், கல்லீரல் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சுவாசக் கோளாறு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம், மனசோர்வு மற்றும் மன பதட்டம் அதிகரிக்கும், மாரடைப்பு, இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பன போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரசுரங்களை, பொது மக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.