கரூரில் மது போதையில் சொகுசு உணவகத்தில் உள்ளே நுழைந்த இரண்டு இளைஞர்களுக்கு சாப்பாடு தர மறுத்ததால் சாலை மறியல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் சொகுசு உணவகத்தில் இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் உள்ளே நுழைந்து சாப்பாடு கேட்டதாக கூறப்படுகிறது.அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் சாப்பாடு தர மறுத்ததால் போதை ஆசாமிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியுள்ளனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் போதை ஆசாமிகளை அழைத்துச் சென்றபோது சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.