தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் குடமுழுக்கின் போது, பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீரை தெளிப்பதற்கான சோதனையை கோயில் நிர்வாகம் நடத்தியது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு ஜூலை 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதையும் படியுங்கள் : மாற்றுத்திறனாளி இளைஞரை அடித்தே கொன்ற கும்பல் தள்ளுவண்டி கடை மீது காரை மோதியதற்காக தாக்குதல்..!