சேலம் மாவட்டம் கூடமலை அருகே திடீரென மயக்கம் வந்த போதும் அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். ஆத்தூரில் இருந்து கெங்கவல்லி, கூடமலை வழியாக தம்மம்பட்டி செல்லும் 7ஆம் நம்பர் அரசு பேருந்து, தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு வந்த போது அதனை இயக்கிய ஓட்டுநர் செல்வராஜுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு மயக்கமடைந்த ஓட்டுநரை, நடத்துநர் சுகுமாரும், பயணிகளும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பணிச்சுமை காரணமாக ஓட்டுநருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : ஏரியில் வண்டல் மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு... அனுமதியின்றி வண்டல் மண் அள்ளுவதாக புகார்