குமரி மாவட்டம் தக்கலையில் டெம்போவை சோதனை செய்தபோது படியில் நின்ற போக்குவரத்து காவலருடன் வாகனத்தை ஒரு கிலோ மீட்டர் தூரம் இயக்கி அவரை தள்ளி விட்ட சம்பவம் நடந்துள்ளது. டெம்போவி ஓட்டுநர் கீழே இறங்காமல் இருந்ததால் படியில் ஏறிக் கொண்டு பிரீத்திங் அனலைஸர் மூலம் ஓட்டுநர் மது அருந்தி உள்ளாரா? என போக்குவரத்து காவலர் சோதனை செய்ய முயன்றார். அப்போது வாகனத்தை இயக்கிய ஓட்டுநர், போக்குவரத்து காவலரை எட்டி உதைத்ததில் கீழே விழுந்தார். இது குறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : கருக்கு பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் பள்ளத்துக்குள் விழுந்த இரு சக்கர வாகன ஓட்டி பத்திரமாக மீட்பு..!