திருப்பத்தூரில் தலைக்கேறிய மதுபோதையில் பேருந்தில் பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து நிலையத்தையே ஓட்டுநர் சுற்றி சுற்றி வந்ததால் பயணிகள் எரிச்சலடைந்தனர். திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மானாமதுரைக்கு புறப்பட்ட அரசு பேருந்தில், ஓட்டுநர் போதையில் நிதானமே இல்லாமல் சிவகங்கை சாலைக்கு பதில் காரைக்குடி சாலையில் சென்றிருக்கிறார். மீண்டும் பேருந்தை திருப்பிக்கொண்டு வந்த அவர் பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் வந்து ஓட்டுநரை கீழே இறக்கியதுடன் மாற்று ஓட்டுநரை வரவழைத்து பேருந்தை அனுப்பி வைத்தனர்.