புதுச்சேரியில் இருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா சென்ற பேருந்து, பிரேக் பிடிக்காததால் சாலையோர வளைவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 25-க்கும் மேற்பட்டவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. இருப்பினும், பேருந்தில் இருந்த 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.