மதுரை மாவட்டம் அனுப்பானடி சோனையா கோவில் தெரு பகுதியில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பீறிட்டுக்கொண்டு நீர் வெளியேறியது. பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணியை நள்ளிரவில் மாநகராட்சி பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொண்டபோது, ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி நின்றதால் குடியிருப்புவாசிகள் அவதியடைந்தனர்.இதையும் படியுங்கள் : ஆசனூர் சோதனை சாவடி அருகே உலா வந்த சிறுத்தை