நெல்லை மாவட்டம் கட்டனேரி கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டால் ஓட்டு போட்டவர்களிடம் போய் கேளுங்கள் என மெத்தனமாக பேசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதையும் படியுங்கள் : தாயை குறித்து அவதூறாக பேசிய நபரை கொன்ற இளைஞர்... கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு