திருச்சி மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனிக்கு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்குவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை எனவும் உப்பு தண்ணியை குடிப்பதால் நோய் தொற்று ஏற்படுவதாகவும் புகார் அளித்தனர்.