கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். கடந்த 29 ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவின் தீமிதி திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குழந்தைகளை தூக்கியபடி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.