நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலய மாசி மாத 13 நாள் திருவிழா, பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. பிடாரி அம்மன் ஆலயத்தில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க 100 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும் பூத்தட்டுகளை ஏந்தி வந்து மனமுருகி வழிபாடு செய்தனர்.