தமிழகத்தில் கூடிய சீக்கிரத்தில் டபுள் இன்ஜின் சர்கார் அமையும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3வது மொழியாக இந்தியை கட்டாயம் என்று கூறவில்லை எனவும், மாணவர்களின் கல்வியில் முதலமைச்சர் விளையாடமல் இருக்க வேண்டும், அப்போது தான் அனைத்து வளர்ச்சிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.