சென்னை, சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முக துவாரத்தில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தண்ணீர் தடையின்றி கடலில் கலக்கும் வகையில் மணல் திட்டுக்களை அகற்றி முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.