நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூலி திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆண்டவன் அருளால் நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் கூலி திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, அதாவது 40 நாட்களுக்கு முன்னதாகவே, தான் மருத்துவ சிகிச்சைக்கு செல்லவிருப்பதாக நடிகர் ரஜினி கூறியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.