திருச்சி மாவட்டம் துறையூரில் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட அரசு முத்திரையிடப்பட்ட முட்டைகள் தனியார் ஓட்டலில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி மற்றும் உணவக உரிமையாளர் ரத்னம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.