மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் பெரிய கோபுரங்களை புனரமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால், தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.