தேனி அருகே தப்புகுண்டுவில் உள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டின வகையை சேர்ந்த கோம்பை நாய் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய் கண்காட்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாட்டின வகையான கோம்பை நாய் வளர்ப்பு குறித்தும் அதன் சிறப்பு குறித்து கல்லூரி பேராசிரியர்கள் உரையாற்றினார். முன்னதாக காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த மோப்ப நாய்களான வெற்றி, வீரா, பைரவ், லக்கி ஆகிய நாய்கள் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தொடங்கிய நாய் கண்காட்சி நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட நாட்டு இன நாய் வகையான கோம்பை , ராஜாபாளையம், கன்னி, சிப்பிப்பாறை மற்றும் வெளிநாட்டு இன நாய் வகைகள் பங்கேற்ற கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது நாய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் கண்காட்சியில் பங்கேற்ற நாய்கள், அதன் உரிமையாளர்களின் உத்தரவுக்கு பணிந்து செயல்பட்டது காண்போரை ஆச்சரியப்படுத்தியது. நாய்களின் உடல் கட்டமைப்பு அதன் வளர்ச்சி உரிமையாளரின் உத்தரவுக்கு கீழ் பணிதல் உள்ளிட்டவை நடுவர்கள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது இதில் சிறந்த நாயான கோம்பை நாட்டின நாய்க்கும் அதன் உரிமையாளருக்கும் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் இந்த நிகழ்ச்சியில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்களை அழைத்து வரப்பட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்