திருநெல்வேலி மாநகராட்சியில் நாய்கள் கருத்தடை மையத்தில் உணவு, குடிநீர் வழங்காமல் நாய்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். மேலப்பாளையத்தில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் கருத்தடை செய்ய அழைத்து வரப்பட்ட நாய்களுக்கு சரியான முறையில் உணவு, தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்று கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனையில் 2 நாய்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர்.