பாலியல் புகாரில் சிக்கிய டாக்டர் சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சண்முகத்துக்கு எதிராக பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.