கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே விபத்தில் சிக்கிய மகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சக்கில்நத்தம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரது 4 வயது மகன் சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி காயமடைந்ததில், சக்கில்நத்தம் கிராமத்தில் தனியார் கிளினிக் நடத்தும் அரசு மருத்துவர் சிகிச்சையளிக்க மறுத்தார்.