மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், இதய நோயாளியான தனது அண்ணனை எட்டி உதைத்ததாகவும், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷின் தம்பி லோகேஷ் புகார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள ஜே 3 காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பின் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் இதனை தெரிவித்தார்.