பட்டாபிராம் டைடல் பார்க் வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 3434-வது கிளையை அமைச்சர் நாசர் துவங்கி வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் வங்கி கடன் பெற வந்த ஒரு நபர் சட்டென்று அமைச்சர் காலில் விழுந்ததால் முகம் மாறி கண்டித்த அமைச்சர் நாசர் காலில் எல்லாம் விழக்கூடாது என அறிவுரை வழங்கினார்.நீங்களே மீண்டும் அமைச்சராக வர வேண்டும் இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் நீங்களே மீண்டும் அமைச்சராக வர வேண்டும் என கூறிய வார்த்தையால் அமைச்சர் நாசர் நெகிழ்ச்சியடைந்தார். Related Link மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்