ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மீது திமுக துணை சேர்மனின் கணவர் ராஜேந்திரன் தாக்குதல் நடத்திய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 வது வார்டு கவுன்சிலரான காத்தார் ராஜா கடந்த பேரூராட்சி கூட்டங்களில் சேர்மனையும் துணை சேர்மனையும் கண்டித்து பல முறை வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த கவுன்சிலர் ராஜாவை வழிமறித்த துணை சேர்மன் அழகுராணியின் கணவர் ராஜேந்திரன் அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.