மும்மொழி விவகாரத்தில் போராடி வரும் திமுகவிற்கு கொள்கை ரீதியாக பாதிப்பு வரும்போது அதனை எதிர்த்து போராட சக்தி இல்லாதால் அதிமுகவை இழுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி அருகே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மும்மொழி கல்வி கொள்கைளை அமல்படுத்தினால் தான் நிதி என மத்திய அமைச்சர் கூறுவது, சர்வாதிகார மனப்பான்மையை காட்டுவதாக சாடினார்.