தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டால், அது திமுகவிற்கு சவாலாக இருக்காது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தில் மக்களின் வரவேற்பை பார்க்கும்போது, திமுக கூட்டணிக்குத் தான் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.