சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக திமுக எம்பி ஆ.ராசா, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வருமானத்திற்கு அதிகமாக சுமார் 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கியதாக கடந்த 2015ஆம் ஆண்டு ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இன்றைய விசாரணையின்போது, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஆ.ராஜா மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையும் படியுங்கள் : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மீது புகார்..