சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் மற்றும் பவள விழாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கலைஞர் உரை அரங்கேற்றப்பட்டது. விழாவில் பெரிய நாற்காலிகள் இரண்டு அமைக்கப்பட்ட நிலையில், ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்த நிலையில் அருகிலிருந்த மற்றொரு நாற்காலியில் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் கலைஞர் அமர்ந்து இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டது.