தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் திமுக உறுப்பினர்களுக்கு இடையே உள்ள உட்கட்சி பூசல் காரணமாக வளர்ச்சித் திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நகர்மன்ற தலைவியாக உள்ள வனிதாவின் கணவர் துரை நெப்போலியன் என்பவர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணனின் ஆதரவாளராக இருந்தபோது, தனது மனைவிக்கு பதவி வாங்கி கொடுத்தார். ஆனால் இப்போது நெப்போலியன் தங்கதமிழ்செல்வன் பக்கம் தாவியதால், ராமகிருஷ்ணன் மற்றும் தங்கதமிழ்செல்வன் இடையே நடக்கும் பனிப்போர் நகராட்சி நிர்வாகத்தை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.