Related Link விஜய் சரவெடி பேச்சு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆட்சியே போய்விடும் என்ற பயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வந்து விட்டதாகவும், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தப் போவதாகச் சொல்லி, மக்களை ஏமாற்றிய துரோகி என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’தமிழகம் முழுவதும், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாதவரம் மற்றும் பொன்னேரி சட்டப்பேரவை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாதவரம் சட்டப்பேரவை தொகுதியில், செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் இபிஎஸ் பேசியதாவது: இப்ப தான் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்திருக்கிறது. பழனிசாமி பயந்தாங்கொள்ளி என்கிறார், நான் மட்டுமல்ல, அதிமுக தொண்டன் கூட பயப்பட மாட்டான். மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் வாக்குப் பதிவு எந்திரங்கள் ஸ்தம்பிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். அந்த அளவுக்கு திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 2011-21 வரையான 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து நான் பொதுவெளியில் பேசுகிறேன். 2021-26 வரை திமுக ஆட்சி திட்டங்கள் குறித்து நீங்கள் விளக்குங்கள், பொதுமக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் என்று ஸ்டாலினை அழைத்தேன். இதுவரை பதிலில்லை.யாரைக் கண்டும் அதிமுக நடுங்கியது இல்லைஅந்தக் காலத்தில் அரசர் தனக்கு பின் மகனுக்கு முடிசூட்டுவார். அதுபோல், ஸ்டாலின் முயற்சிக்கிறார். கருணாநிதி திமுக தலைவர், முதல்வர். அதன் பின்னர் ஸ்டாலின். பிறகு அவர் எந்த உழைப்புமே இல்லாமல் தன் மகன் உதயநிதியை பிரச்சாரம் செய்ய வைத்து துணை முதல்வர் ஆக்கிவிட்டார். திமுகவுக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள். துரைமுருகன் திமுகவுக்கு தன் உழைப்பை கொடுத்திருக்கிறார். அதிக நாள் எம்எல்ஏவாக இருந்த அவர், துணை முதல்வராக முடியவில்லை. அதிமுக ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர், முதல்வர் ஆக முடியும். திமுகவில் உழைத்தவர்களுக்கு தலைவர், முதல்வர் பதவி கிடைக்கும் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? முதல்வர் ஸ்டாலின், பாஜகவை கண்டு அதிமுக நடுங்குகிறது என்கிறார். எப்போதும் யாரைக் கண்டும் அதிமுக நடுங்கியது இல்லை. 2011 தேர்தலின்போது திமுகவும் காங்கிரசும் கூட்டணியில் இருந்தபோது அறிவாலயத்தில் சிபிஐ விசாரணைக்கு நடுவே கூட்டணிப் பேச்சு நடந்தது.என்ன செய்தார்கள் திமுக எம்பிக்கள்?அதிமுக அப்படியல்ல, காவிரி நீர் பிரச்சினைக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தும் கூட, உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கி, விவசாயிகள் உரிமையை பாதுகாத்தது. என்னை பாஜகவின் முரட்டு அடிமை என்கிறார்கள். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாஜகவுடன் கருணாநிதி கூட்டணி அமைத்தார். அப்படியானால், வாஜ்பாயின் முரட்டு அடிமையாக கருணாநிதி இருந்தாரா? ஆமாம், என்று திமுகவினர் ஒப்புக் கொள்வார்களா? திமுக அணிக்கு 39 எம்பிக்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்தார்கள்? திமுக தமிழகத்துக்கு தேவையான திட்டம், நிதியை பெற்றதா? நீட் தேர்வு ரத்துக்கு முயற்சி எடுத்ததா? பேசினால் ரெய்டு வந்துவிடும், அத்தனை பயம். வெளியில் மட்டும்தான் வீராப்பாகப் பேசுவார்கள். ஆனால், உள்ளே பயம்.அதிமுக ஆட்சி தொடர வேண்டும் - இபிஎஸ்திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு பலூன் விட்டார் ஸ்டாலின். இன்று அவர், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்ததும் வெள்ளைக் குடை பிடிக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருமாதிரி, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரி என்பதை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு நல்ல கல்வி, உணவு, இருப்பிடம், தடையில்லா மின்சாரம், விவசாயம், நீர், சுகாதாரம் என கொடுத்தோம். மீண்டும் அப்படிப்பட்ட ஆட்சி தொடரவேண்டும். இவ்வாறு இபிஎஸ் பேசினார். Related Link "விஜய், ஸ்டாலின் சார் இடையேயான போர்"