முருக பக்தர்களுக்கு பல்வேறு இடையூறுகளை திமுக அரசு தொடர்ச்சியாக செய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுக அரசு பல்வேறு இடையூறுகளை அளித்து வருகிறது.என்றும், திட்டமிட்டபடி வரும் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என்றும் கூறினார்.