திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் 7ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 7ஆம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.