தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சிக்கன் கடை நடத்தி வரும் திமுக கவுன்சிலரை மதுபோதையில் தாக்கி மண்டையை உடைத்த சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் நகராட்சி திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் என்பவர் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மது போதையில் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் சிக்கன் வாங்கி கொண்டு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், கவுன்சிலரையும், அவரது சகோதரரையும் அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி, கடையில் இருந்து சில்லி சிக்கன் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியது.