தருமபுரி மாவட்டம் நந்தி நகரில் கூரியர் நிறுவன ஊழியரை திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. 13 வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கும் ஜெகன் என்பவருக்கு ஆன்லைனில் ஆர்டரை ஹரிகரன் என்பவர் டெலிவரி செய்துள்ளார். இந்நிலையில் ஜெகன், பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் அவர் ஆர்டர் செய்த பொருளுக்கு மாற்றாக வேறு பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர், பொருளை ஹரிகரன்தான் மாற்றியிருக்க கூடும் என கூறு தகராறில் ஈடுபட்டதோடு ஜெகனையும் தாக்கியுள்ளார்.