சேலத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். புதிதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்