தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) மற்றும் அதன் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கடலூர் தேமுதிக நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்: சமீபகாலமாக சவுக்கு சங்கர் மற்றும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா ஆகியோர் தேமுதிக கட்சி குறித்தும், அதன் தலைமை குறித்தும் தவறான தகவல்களைப் பகிர்ந்து வருவதாகக் கூறி, கடலூர் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தொடர்ந்து அவதூறு பரப்பினால், தேமுதிக மகளிர் அணியினர் செருப்பு மற்றும் துடைப்பங்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடு தேடிச் செல்வார்கள் என எச்சரித்துள்ளார். மேலும் கத்தி, வெடிகுண்டு போன்ற பொருட்களுடன் நேரில் வரத் தயங்க மாட்டோம் என்றும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் "எங்களிடம் ஜேசிபி (JCB) மற்றும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன; தலைவர்களைக் காயப்படுத்தும் வகையில் பேசினால், அந்த வாகனங்களுடன் நேரடியாக வந்து எதிர்வினையாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பப்படுவதால், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பை இந்த வீடியோ பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. Related Link சிபிஐ விசாரணைக்கு 2 காவலர்கள் நேரில் ஆஜர்