திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கோவை அன்னபூர்ணா தங்கும் விடுதியின் மேல் தளத்தில் அனுமதியின்றி டி.ஜே பார்ட்டி நடத்தியதாக, பார்ட்டி நடந்த அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் dj பார்டிக்கு அனுமதி இல்லை எனவும், இது குறித்து தகவல் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.