மதுராந்தகம் அருகே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், தீபாவளியை முன்னிட்டு காலை 6 மணி முதல், நாளை நள்ளிரவு 12 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து அதிகப்படியான வாகனங்கள், தென் மாவட்டங்களை நோக்கி செல்ல இருப்பதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலை திருக்கழுக்குன்றம் வழியாக மதுராந்தகம் நோக்கி செல்கின்ற மேளவளம்பேட்டை சந்திப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், படாளம் புக்கதுறை சாலையை பயன்படுத்தமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விரிவாக்க சாலை வழியாக திருமுக்கூடல் வந்தவாசி, நெல்வாய் சாலை சந்திப்பு, உத்திரமேரூர், திண்டிவனம், வழியாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.