தீபாவளி, சட்பூஜா பண்டிகை விடுமுறை மற்றும் பீகார் தேர்தலையொட்டி ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு படை எடுத்துள்ளதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில், தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையொட்டி திருப்பூரில் ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள், வடமாநிலத்திற்கு செல்லக்கூடிய ரயில்களில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து ஏறி சென்றனர்.