தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை உசிலம்பட்டி மலர் சந்தையில், பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பண்டிகை காலத்தை தொடர்ந்து, பூக்களின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை 500 முதல் 800 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மூன்று மடங்காக விலை உயர்ந்துள்ளது. இதன்படி, நேற்று ஒரு கிலோ 1500க்கு விற்பனை ஆன மல்லிகை பூ இன்று 2500 ரூபாய்க்கும், கனகாம்பரம் - 2000 ரூபாய்க்கும், முல்லை மற்றும் காக்ரெட்டான் - 1500 ரூபாய்க்கும், பிச்சி - 1200 ரூபாய்க்கும், அரளி, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் உள்ளிட்டவை 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.