தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்திய போது, கணக்கில் வராத பணம், வெடிபாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் தீயணைப்பு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பணம் மற்றும் வெடி பாக்ஸ்கள் இலவசமாக பெறப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். இதில் தீயணைப்பு துறை அலுவலகத்தில் கணக்கில் வராத 35 ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் 50க்கும் மேற்பட்ட வெடி பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குணசேகரன் மற்றும் பிற வீரர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.