தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக புதுச்சேரி கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. புதுச்சேரி நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதி, மிஷின் வீதி உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்குவதற்காக மக்கள் அதிகளவு திரண்டனர்.