தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் நகரின் அனைத்து பகுதிகளிலும் புகை மண்டலமாக காட்சியளித்தது. விழுப்புரம் நகரப் பகுதியில் மாலை 7 மணி முதல் மக்கள் ஒரே நேரத்தில் பட்டாசு வெடித்ததால் புகை சூழ்ந்து சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தஞ்சையில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது பனிப்பொழிவு ஏற்பபட்டதால் காற்றுமாசு ஏற்பட்டு, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர்.