தீபாவளி பண்டிகை மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமானோர் வருகை தந்ததால் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாச்சலேஸ்வரரை பக்தர்கள் வழிபட்டனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கோவிலுக்கு சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்ததாக கூறப்படுகிறது.