திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் அருகே வீட்டில் பெண் மர்மமாக உயிரிழந்து கிடந்த விவாகரத்தில் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். பொன்னன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவா - சந்தியா தம்பதி. சிவா பெங்களூருக்கு வேலைக்கு சென்ற நிலையில், கடந்த 11 ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சந்தியா சடலமாக கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், சந்தியாவின் செல்போனுக்கு இரண்டு எண்களிலிருந்து அழைப்பு வந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் குமரேசனை பிடித்து விசாரணை செய்ததில் இருவருக்கும் அப்பெண்ணுடன் தகாத உறவு இருந்ததும், இருவரும் அவரை துன்புறுத்தியதில் சந்தியா உயிரிழந்ததும் தெரியவந்தது.