சென்னையையடுத்த ஆவடி அருகே பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - திருவள்ளூர் இடையேயான புறநகர் ரயிலில் பள்ளி மாணவர்கள் சிலர் ரயிலில் தொங்கியபடியும், கால்களை பிளாட்பாரத்தில் தேய்த்தபடியும் விபரீத பயணம் மேற்கொள்கின்றனர். நிற்கும் ரயிலில் ஏறாமல், வேண்டுமென்றே ஓடிச் சென்று ரயிலில் ஏறுவது, பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்திக்கூச்சலிடுவது என அடாவடி செயலில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.