மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெறும் இந்த போட்டியில், பள்ளி- கல்லூரி மாணாக்கர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் 25 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.