நாகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பீச் வாலிபால் இறுதி போட்டியில், நம்பியார் நகர் அணியை வீழ்த்தி தமிழ்நாடு பீச் வாலிபால் அணி வெற்றி பெற்றது. இதேபோல் பெண்கள் அணியில் ஏ.ஆர்.போலீஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பாராட்டினார்.